Skip to content
Home » 100 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது…. வீடியோ…

100 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது…. வீடியோ…

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த Highschool புதூர் பகுதியில் கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே சுமார்  100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்றும் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்தத அந்த அரச மரம் வலுவிழந்து உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் இரண்டு மணிக்கு மேல் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக வலுவிழந்த அந்த அரசமரம்

வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த செல்போன் கட்சிகள் வைரலாகி வருகிறது. அதே சமயம் மரம் சாய்ந்தது மதியம் என்பதால் பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!