Skip to content
Home » 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்காரணமாக தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட மக்களும் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவாட்டங்களில் அக்டோபர் மாத மின்கணக்கீட்டின் படி செலுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மழை பாதிப்பு காரணமாக 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்ய சிரமம் உள்ளதாக மின்வாரியம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!