Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த அதிர்ச்சியில் 9 பெண்கள் மயக்கம்…

பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த அதிர்ச்சியில் 9 பெண்கள் மயக்கம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரத்தில் செயல்பட்டு வரும் (கிரெடல் கிளாத்திங்) தனியார் பனியன் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட வட மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள்வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பலரும் சென்ற நிலையில் அங்கு சிலர் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த அயர்னிங் பாய்லர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாய்லர் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் 9 பெண்கள் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு வேலை செய்யும் சக பணியாளர்கள் மயக்கமடைந்த 9 பேரையும் மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதிய உணவு இடைவேளையில் இந்த விபத்து நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!