Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது..தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமானநிலையத்தில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு தாய் ஏர் ஏசியா விமானம் நேற்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடைமையை அதிகாரிகள் தீவிர சோதனைக்குட்படுத்தினர். அதில், ரூ. 2.10 லட்சம் மதிப்பு 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை உடைமையில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!