Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 எம்.எல்.ஏக்கள் உடல் நலம் தேற, பாமக கூட்டுப்பிரார்த்தனை

பாமகவில்  டாக்டா் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது.  இந்த நிலையில்  அன்புமணி  நான் தான் தலைவர், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறி  சில மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டத்தை வட்டுவதாகவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அந்த வகையில் இன்று   அன்புமணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை  சேலம்  சூரமங்கலத்தில் கூட்டி உள்ளார். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பாமக எம்.எல்.ஏக்கள்,  செயல்தலைவர்  ஜி.கே. மணி,  சேலம் அருள் ஆகியோர்  நெஞ்சுவலி காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி,  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் 2 எம்.எல்.ஏக்களும்  உடல் அளவிலும், மனதளவிலும் நலம் பெறவேண்டும். இதற்காக  நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

error: Content is protected !!