Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை அபிஷேக அறக் கட்டளையினர் பாடல் பெற்ற தலங்களில் பெளர்ணமி, அமாவாசை தினங்களில் சுவாமிக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் செய்து வருகின்றனர். 276 பாடல் பெற்ற தலங்களில் 99 வது தலமாக பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சுவாமி, அம்மனுக்கு 108 மூலிகைகளல் அபிஷேகம் நடந்தது. முன்னதாக தேங்காய், மாலை, வஸ்திரம், மூலிகை குடத்தை வரிசை எடுத்து வந்தனர். இதில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப் பட்டது. பட விளக்கம்: எடப் பாடி மூலிகை அபிஷேக அறக் கட்டளையினரால் கோயில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு மூலிகை அபிஷேகம் நடந்தது.

error: Content is protected !!