Skip to content

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன சோதனை நடத்தினர்.

மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னுசாமி என்பவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இவர்கள் போலீஸ் என்பது தெரியாததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பொன்னுசாமியின் மகனும், திமுக முன்னாள் ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளருமான ராஜேஷ்கண்ணன், அவரது நண்பர் சின்னதுரை ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களும் மப்டியில் இருந்து போலீசாரை தாக்கினர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர்  கட்டி உருண்டு  தாக்கிக்கொண்டனர்.

இதற்கிடையே மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமிக்கு இந்த தகவல் கிடைத்து அவரும் அங்கு வந்து போலீசாரை சரமாரி தாக்கினார்.   ஒன்றிய திமுக செயலாளர் தாக்கியதை தொடர்ந்து சிலர் கும்பலாக வந்து எஸ்.ஐ. மற்றும் போலீசாரை கடுமையாக தாக்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு வந்து  எஸ்.ஐ. பாலமுருகன், போலீஸ்காரர் ஜெகன் ஆகியோரை மீட்டனர்.  பலத்த காயமடைந்த இருவரும்  மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  போலீஸ்காரர் ஜெகன்  திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேபோல, இந்த சம்பவத் தில் காயமடைந்த ராஜேஷ் கண்ணன், சின்னதுரை ஆகியோ ரும் மணப்பாறை அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக ஒன்றியச் செயலாளர் ராமசாமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் போலீசார் தங்களை தாக்கியதாக கூறியுள்ளார். தனிப்படை போலீசாரும் புகார் அளித்து உள்ளனர்.  போலீஸ்காரர்களை திமுக ஒன்றிய செயலாளர் தங்கள் ஆட்களுடன் தாக்கிய சம்பவம் மணப்பாறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!