திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சுரேஷ் வழக்கம்போல் வீட்டிலிருந்து அவரது கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு கோழிப்பண்ணையில் மின் பழுது ஏற்பட்டதால் மின் இணைப்பை துண்டிக்காமல் மின் ஒயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நன்னி மங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…
