Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பியில் டிராக்டர் டிப்பரில் தீ- உயிர் தப்பிய டிரைவர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜன் மகன் மணிகண்டன் (35) என்பவர் தூத்தூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் இருந்து தனது டிராக்டர் டிப்பரில் சொந்த உபயோகத்திற்காக வைக்கோல் ஏற்றிக்கொண்டு சொந்த ஊரான அங்கராயநல்லூர் கிராமத்திற்கு வந்தபோது அங்கராயநல்லூர் – வானதிரையன்பட்டினம் சாலையில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வைக்கோல்

இருந்த டிப்பரில் டிப்பர் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மணிகண்டன் உட்பட கூலி தொழிலாளிகள் 2 பேரும் உயிர்த்தபினர். தொடர்ந்து டிப்பரை கழட்டி விட்டு இன்ஜினை பிரித்து தனியாக நிறுத்தினர் . அக்கம் பக்கத்தில் தீ எங்கும் பரவாமல் இருக்க ஒரு வழியாக எரிந்த வைக்கோலில் தண்ணீர் பீய்ச்சி அடித்து முற்றிலுமாக தீயணைக்கப்பட்டது. இதனால் அங்கராயநல்லூர் -வான திரையன்பட்டினம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

error: Content is protected !!