Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவைக் கோரியது. அதன்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரை விஜய் இதுவரை மூன்று முறை சந்தித்துள்ளார்.
அதிமுகவும் திமுகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆட்சியமைக்கும் அரசுக்கு வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!