திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். விசாரணையில், திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய ஆந்திராவைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணின் முகத்தில் மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி,

முகத்தை எரித்துக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
