தஞ்சாவூரில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீரைத் தேடி சென்று தாகம் தீர்த்த மயில்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நமது தேசிய பறவையான மயில் அதிக அளவு காணப்படுகிறது, தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது, இதில் மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள் மற்றும் விலங்கினங்களும் பாதிக்கப்படுகின்றன, இந்நிலையில் தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மரங்கள்

அடர்ந்த பகுதியில் மயில் ஒன்று இரையை தேடி அலைந்தது, அப்போது அங்கு குடிநீர் குழாயில் வீணாகச் சென்ற தண்ணீரை குடித்து தனது தாகத்தை போக்கிக் கொண்டது, கடுமையான

வெயில் காலம் என்பதால் குருவிகள்,பறவைகள் விலங்கினங்களுக்கு தங்களது வீடுகளில் மொட்டை மாடியில் தண்ணீர் வைத்து அவற்றை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
