அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பயன்படுத்தாமல் இருந்த காரை பழுதுபார்க்க முயன்ற விண்டி டக் தம்பதியினர், என்ஜின் பகுதியில் இருந்த 4 அடி நீள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆரம்பத்தில் அதை பழைய அழுக்கு குழாய் என நினைத்து அகற்ற முயன்றபோது, பாம்பு தங்களை திரும்பி பார்த்ததால் விலங்கு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு மீட்பு நிபுணர், காரின் என்ஜினுக்குள் சிக்கியிருந்த பாம்பை பத்திரமாக மீட்டு சென்றார்.
