Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருட்டு வழக்கு” : யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33), தொழிலதிபர். ஏலக்காய் வியாபாரம் செய்து வரும் இவர் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி மதுமிதா. யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகள், நகைகள் அணிந்து கட்டுக்கட்டாக பணத்துடன் இருப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். கடந்த 24-ந் தேதி மதுமிதா தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 118 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுமிதா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவற்றின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் 5 சவரன் நகையை திருடியதாக | நாகர்கோயிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது, யூடியூபர் மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காரில் இணைந்து பயணித்த தருணத்தில், பேச்சிமுத்துவுக்குத் தெரியாமல் அவரது 5 சவரன் நகைகளை மதுமிதா திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அச்சமயத்தில் இதுகுறித்து வெளியில் கூறினால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என மதுமிதா மிரட்டியதால், பயந்துபோய் உடனடியாக புகார் அளிக்கவில்லை என்று பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். தற்போது தைரியமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!