சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வங்கி மேலாளர் தேவபிரசன்னா குடும்பத்துடன் கேரளா சென்றிருந்த சமயத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். வீடு திரும்பியபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அவர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரிக்க, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வங்கி மேலாளர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை…பரபரப்பு
