திருச்சி அக்27 – திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி நகரில் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பட்டாசு பாக்ஸ்கள் வைக்கப்பட்டு இருப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு அந்த அலுவலகத்தில் அனுமதி இன்றி பட்டாசு பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மேலாளர் செந்தில் மற்றும் ஊழியர் ஜெகதீசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2பேர் கைது
