Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்வே ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு-4 பேர் கைது

ரயில்வே ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு-4 பேர் கைது

திருச்சி திருவெறும்பூர் திருநகர் மல்லிகா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (46). இவர் பொன்மலையில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில் நேற்று இவர் பொன்மலை சந்தை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ 500 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொன்மலைப் பகுதியில் சந்தேகத்திற்கு கிடமாக சுற்றி திரிந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு ஜீவா (28) திவாகர் (27) சிவராமன் (28) அஜித் என்பதும், இவர்கள் தான் மகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடி ச்சென்றனர் என தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சிவராமன் ரவுடி பட்டியலில் உள்ளார்.

error: Content is protected !!