Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாடு மீது பைக் மோதி கொத்தனார் பலி – 2 பேர் படுகாயம்!

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பெருங்குளம் பண்ணைவிளை புதூரைச் சேர்ந்த நாராயணன் மகன் வேல்கண்ணன் (37). அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் அருண்குமார் (21). ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை சித்தார்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் கார்த்திக் ராஜா (28). இவர்கள் மூவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி மூவரும் சென்ட்ரிங் வேலைக்காகச் சாயர்புரம் சென்றுள்ளனர். அங்கு இரவு வேலை முடிந்ததும், மூவரும் ஒரே பைக்கில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை வேல்கண்ணன் ஓட்டிச் சென்றுள்ளார். மாடு மீது பைக் மோதிய கோர விபத்து:

அப்போது, கொம்புக்காரபொட்டல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இரவு நேரம் என்பதாலும், பைக்கில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.

இதைப்பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தூத்துக்குடி சுற்றுலா வழிகாட்டி

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி வேல்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!