தூத்துக்குடி மாவட்டம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை சார்பில், “நேர்மையே வளமை” என்னும் தலைப்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கி வருகிற நவம்பர் 1-ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி சுற்றுலா வழிகாட்டி
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்குள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி மற்றும் அனிதா தலைமையிலான காவல்துறையினர் கலந்துகொண்டு பயணிகள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதைப் பொதுமக்களுக்கு எளிதில் எடுத்துரைக்கும் வகையில், கல்லூரி மாணவர்களை வரவழைத்து விழிப்புணர்வு நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நாடகம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்தது.
