Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏமாந்த தவெகவினர்… தட்டித்தூக்கிய மு.அதிமுக… திருச்சியில் பரபரப்பு

ஏமாந்த தவெகவினர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பது, விளம்பர அனுமதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்குள் சர்ச்சை எழுந்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சில முன்னாள் நிர்வாகிகள், தீபாவளி வியாபாரம் தொடர்பான வருவாய் வாய்ப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, திருச்சி மாநகரில் தீபாவளிக்காக அமைக்கப்படும் 450 தற்காலிக கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்படி மொத்தம் ரூ.45

லட்சம் வசூலிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இருப்பினும், இந்தக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகை தனியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், தீபாவளி விளம்பரங்களுக்கான ஒலிபெருக்கி அனுமதி, ஏர்போர்ட் வாரச்சந்தை வசூல், பட்டாசு விற்பனைக்கான அனுமதி நடவடிக்கைகள் மற்றும் கடைகளுக்கான மின்விளக்கு அலங்காரப் பணிகளிலும் முன்னாள் அதிமுக நிர்வாகிகளின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், கட்சியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி தவெகவில் தீபாவளி வியாபாரத்தை மையமாக வைத்து எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

திருச்சியில் தீபாவளி தற்காலிக கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும், பொது ஏலம் நடத்த வேண்டும் என்றும் பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி தவெகவினர் தரப்பில் சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு போஸ்டர் வைரலாகி உள்ளது. இந்த போஸ்டரில் விபரம் இதுதான்.. ஏமாந்த தவெகவினர்.

தட்டி தூக்கிய முன்னாள் அதிமுகவினர்.

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுகவினர் வருமானத்தில் கொழிக்கும் போது
திருச்சி மாநகரில் தவெகவினரை நினைத்தால் பரிதாபமாக உள்ளது

வாங்க எதில் வருமானம் என பார்ப்போம்.

தீபாவளி தற்காலிக கடை போட ஒரு கடைக்கு 10000 வீதம் 450 கடைகள் தட்டி தூக்கியது மு.அதிமுக.

தீபாவளிக்கு மாநகரமெங்கும் சாலைகளில் ஒலிபெருக்கி விளம்பரம் செய்ய அனுமதி பெற்றுள்ளது மு.அதிமுக

ஏர்போர்ட் வாரசந்தை வசூலில் இறங்கியிருப்பது மு.அதிமுக.

நகரில் கூட்டுறவு மற்றும் பட்டாசு விற்பனை அனுமதி பெற நீங்கள் அணுக வேண்டியது அதே மு.அதிமுக.

இது தவிர தீபாவளி கடைகளுக்கு வெளிச்சத்திற்கு பஜார் முழுவதும் லைட் கட்டுவதும் அதே மு. அதிமுக.

நூறு ஒவா லைட்டு கம்பத்தை கூட சக தவெகவிற்கு விட்டு தராத தவெகவில் இணைந்த மு அதிமுகவினர்.

இது சாம்பிள் தான்..

திருச்சி மாநகரில் ஒரு கூட்டமாக தவெகவில் இணைந்து திட்டமிட்டு இன்று வளமாக பணம் பண்ணுவது முன்னாள் அதிமுகவினரே.

ஏமாந்து இதை வேடிக்கை பார்ப்பது அய்யோ பாவம் தவெகவினர் தான்.

error: Content is protected !!