Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி கொண்டாட திருச்சி ஆணையர் வேண்டுகோள்!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமைப் பட்டாசுகள் குறைந்த அளவு புகையும், ஒலியும் எழுப்பக்கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஒலி மாசு தவிர்த்தல் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் முதியோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பணிகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மிக சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். பொதுமக்கள் பட்டாசு வெடித்த பிறகு மீதமாகும் காகிதக் கழிவுகள் மற்றும் சாம்பலைத் தனியாகச் சேகரித்து வைக்க வேண்டும். அவற்றை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்; எரியும் குப்பைகளிலோ அல்லது வடிகால்களிலோ கொட்டக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகிலும், மின் கம்பிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தத் தீபாவளியை ஒளியின் திருநாளாக மட்டுமின்றி, மாசில்லாத் திருநாளாகவும் கொண்டாடி, தூய்மையான மற்றும் பசுமையான மாநகரத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறோம். இதற்காகப் பொதுமக்கள் வழிமுறைகளைப் பின்பற்றி, மாசில்லா தீபாவளியாகக் கொண்டாட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் பொன்மணி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!