Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி……ரயில் கட்டணம் குறைப்பு

கொரோனா காலத்தில், சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயிலுக்கான  கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது  2 மடங்கு  கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.   கொரோனா முடிந்து  மக்கள்  மாமுல் வாழ்க்கைக்கு வந்து விட்ட நிலையில்  உயர்த்தப்பட்ட  கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 1 வருடமாக  எழுந்தது. இதை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.  இந்த நிலையில் நேற்று முதல் பழைய கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. அதாவது4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் இந்த கட்டண  குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  பாசஞ்சர் ரயில்களில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் அது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!