Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 101 வது ஆண்டை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதசி முன்னிட்டு கருவறைக்குச் சென்று சுவாமியை தொட்டு தரிசிக்கும் பூலோக சொர்க்க திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் பண்டரிநாதன், ருக்குமணி தாயார் மற்றும் மூலவர் பண்டரிநாதன், ருக்மணி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு எண்ணெய்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் தீர்ந்த இளநீர் ,எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது.   தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்து ஏராளமான பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசித்து தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஆலய மண்டபத்தில் உற்சவர் பண்டரிநாதன் மற்றும் ரகுமாரி தாயார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன் பிறகு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அருள்மிகு பண்டரிநாதன் ஆலயத்தில் ஆஷாட ஏகாதசியை  முன்னிட்டு கருவறைக்கு சென்று சுவாமியை  தொட்டு தரிசிக்கும் பூலோக சொர்க்கத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!