Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரக்கோணம் – சென்னை இடையே நாளை முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை!

அரக்கோணம் –சென்னை இடையே நாளை முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை!

அரக்கோணம் – சென்னை இடையே குளிா்சாதன மின்சார ரயில் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அரக்கோணம் – சென்னை இடையே குளிா்சாதன பெட்டிகளுடன் இயங்கும் மின்சார ரயில் சேவை அக். 23 முதல் டிச. 24 வரை சோதனை ஓட்டமாக இயக்கப்பட உள்ளது.

12 பெட்டிகளுடன் உள்ள இந்த மின்சார ரயில் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் இயக்கப்படும்

இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பின்னா் பெறப்படும் ஆய்வறிக்கைகளை பொறுத்து இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிப்பு பின்னா் வெளியாகும்.

காலை 6.30 மணியளவில் ஆவடியில் புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் அரக்கோணம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று அரக்கோணத்தை 7.45க்கு சென்றடையும்.

பிறகு காலை 8.00 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் திருவாலங்காடு கடம்பத்தூர் திருவள்ளூா் திருநின்றவூா் வில்லிவாக்கம் பெரம்பூா் பேசின்பிரிட்ஜ் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

காலை 9.40-க்கு தென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் ஆவடி வரையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று ஆவடிக்கு 10.25-க்கு சென்று சேரும்.

மாலை 5.25-க்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கலும் நின்று மாலை 6.10-க்கு சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தை அடையும். மாலை 6.30-க்கு சென்னை சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்படும் இந்த ரயில் வழியில் பேசின்பிரிட்ஜ் பெரம்பூா் வில்லிவாக்கம், அம்பத்தூா் திருநின்றவூா் திருவள்ளூா், கடம்பத்தூா் திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று 7.55-க்கு அரக்கோணத்த சென்றடையும்

error: Content is protected !!