Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்- கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு- கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தபுத்தூர் கிராமத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், திருமனூர் ஒன்றியங்களைச் சார்ந்த 227 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வைப்பூர் முதல் தா.பழூர் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை

தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும், எதிர்வரும் காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாத வகையில் குடிநீர் குழாய்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தினார். மேலும், கூட்டுக்குடிநீர் குழாய் திட்ட வரைபடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு குடிநீர் விநியோகம் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் சூரியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!