தமிழகத்தில் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி. கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
