Skip to content
Home » கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார் வணிகவியல்

துறையில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அறைக்கு மாணவி வர சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சக மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது
கடந்த 24ம் தேதி அதை வகுப்பில் பயிலும் சக மாணவர்களிடம் இந்த மாணவிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரிடம் கேட்டபோது உங்கள் வேலையை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரையும் கல்லூரியின் ஆய்வகம், கணினி பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேராசிரியர் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேராசிரியர் வினோத் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பேராசிரியர் வினோத் குமாரை தாக்கிய மாணவர்கள் 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கௌரவ விரிவுரையாளர் வினோத் குமாரை மாணவர்கள் தாக்கும் பொழுது கணினி மையத்தில் இருந்த பொருட்கள் கணினிகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ 1.50 லட்சம் ரூபாய் எனவும், இந்த செலவுகளை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 மாணவர்களும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டும் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடன் பயிலும் சக மாணவிக்கு ஏற்பட்ட பாலில் தொல்லை பிரச்சனைக்கு நீதி கேட்க சென்ற மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!