சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று நள்ளிரவு நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும், பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பஸ்சை டிரைவரும், கண்டக்டரும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ்சில் ஒரு கைத்துப்பாக்கி, அரிவாள் ஆகியவை கிடந்தது.
இந்த துப்பாக்கி, அரிவாளை அரசு பஸ்சில் எடுத்து வந்தது யார், ஏன் பஸ்சிலேயே விட்டு சென்றார்கள், மறந்து விட்டு சென்றார்களா அல்லது வேறு எதற்காக விட்டு சென்றார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. இது குறித்து டெப்போ மேலாளர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி் வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.