கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை முட்டி உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஹசிடே பகுதி தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த யானை கேட்டை உடைத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தியதுடன், யானையை காட்டுக்குள் விரட்டினர்.
வனத்திலிருந்து வெளியேறிய யானை- ரயில்வே கேட்டை உடைத்து அட்டகாசம்!
