நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் மாஸ்டர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், நிவின் பாலி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக கூறப்ட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.