திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்குப் பிரத்யேகச் செயலியுடன் கூடிய நவீன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு செயலியுடன் கூடிய செல்போன் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் பிரதிக் தயாள் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
