Skip to content
Home » கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பலகாரம் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதற்காக பொருட்கள் வாங்குவதற்கும் புதிய ஆடைகள் வாங்குவதற்கும் கரூர் நகர் பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

கரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது

இந்நிலையில் கரூர் நகர் பகுதியில் வரும் அரசு பேருந்தில் தொடர் மழை காரணமாக பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிக்கும் பயணிகள் குடைகள் வைத்தபடி பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

தமிழக அரசு சார்பில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது ஆனால் மகளிர் அரசு பேருந்தில் அமர்ந்து பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் உட்பட மங்கலம் பகுதியில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை சென்ற அரசு பேருந்தில் பயணிகள் குடை விரித்தபடி இருக்கையிலும் அமர முடியாமல் நின்று பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!