Skip to content
Home » கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான முன்னோட்டமாக ட்ரைலர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியானது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள லட்சுமி ராம் திரையரங்கில் கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியாக ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. திரையரங்கு முன்பாக பட்டாசு வெடித்து, இசை வாத்தியங்கள் முழங்க ஆரவாரத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தின் முன்னோட்டத்தை கண்டு ரசித்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வெளியே

வந்தனர். படத்தின் டிரைலர் சிறப்பாக வெளியாகி உள்ளதாகவும், ஹாலிவுட் தரத்திற்கு ட்ரெய்லர் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை புரியும் என்று தெரிவித்தனர்.

மேலும், திரையரங்கில் லியோ ட்ரெய்லர் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூரும் இல்லாமல், அமைதியான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!