Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையில் பயிலும் மாணவி ஒருவர், கடந்த 20}ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு வந்தபோது தனது ஒன்றரை பவுன் தங்க கைச்சங்கிலியை தொலைத்துவிட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் புகார்அளித்திருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறையில் கெüரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் விஜயன், கீழே கண்டெடுத்த மாணவியின் தங்க நகையை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, நகையைத் தவறவிட்ட மாணவியை வரவழைத்து கெüரவ விரிவுரையாளர் விஜயன் கையாலேயே அதை மாணவியிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வழங்கினர்.
மாணவியின் நகையை கண்டெடுத்து நேர்மையுடன் ஒப்படைத்த கெüரவ விரிவுரையாளர் விஜயனை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் வே. ராஜேஸ் கண்ணன், பதிவாளர் ஆர்.காளிதாசன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!