Skip to content
Home » ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

ஜனவரி 3, 4-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜனவரி 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!