Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்… நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது… வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள்… திருச்சியில் வரும் 26-ம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி கூட்டம். நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்திலும், வரலாம், முன்கூட்டியும் வரலாம். நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நாடாளுமன்ற தேர்தல் களம் நம்மை அழைக்கிறது, ஜனநாயகம் காத்திடும் வீரர்களான உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். அரசியல் எதிரிகள் அவதூறு பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் செயல் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனை படைத்திடும் ஆற்றல் திமுகவினருக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!