Skip to content
Home » மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

  • by Senthil

நாகை மாவட்டம், ஒரத்தூரில் 254கோடி ரூ.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 700 படுக்கையுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை அறைகளையும் அவர் பார்வையிட்டார்.இதில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி

கழக தலைவர் கௌதமன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக முதல்வர், பிரதமரிடம் 33 மாதங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்துள்ளதுடன், கடிதமும் எழுதியுள்ளார் என்றும், 2024 ஆம் ஆண்டு இறுதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் கூறினார். அவ்வாறு மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கப்பட்டாலும் 2028 ஆம் ஆண்டுக்குள் அது பயன்பாட்டிற்கு வரும் எனவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!