Skip to content
Home » ”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….

”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். சமூக நீதி குறித்தும், சமத்துவம் குறித்தும் இந்த படம் ஆழமாக பதிவு செய்துள்ளது.

இப்படம் தமிழகம் முழுவதும் உள்ள 700 திரையரங்குகளில் வெளியானது. ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 கோடி வசூலித்து இதுவரை உதயநிதி பெறாத வசூலை பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை குறைந்த பட்ஜெட்டிலேயே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்தது.

maamannan

ஏ.ஆர்.ரகுமான் சிறப்பான இசையை இந்த படத்திற்கான பெரிய அளவில் கை கொடுத்திருந்தது. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!