Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

கரூர் : பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு விரைந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், கரு்ர் மாவட்ட பகுதிகளில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாடும் பகுதிகளில் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இதே போன்ற நிகழ்வு, கரு்ரில் இருந்து சின்னமநாயக்கன்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையோரம் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.கரூர் வெள்ளியணை சாலையில் இருந்து சின்னமநாயக்கன்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையோரம் பல்வேறு குடியிருப்புகளும், பரந்து விரிந்த நிலப்பரப்பும் உள்ளது. அந்த பகுதிச் சாலையோரம் அதிகளவு கால்நடைகளும், பொதுமக்களும் அதிகளவு சென்று வருகின்றனர்.

இந்நிலையோரம் இந்த சாலையோரம் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளான, ஊசியுடன் கூடிய சிரிஞ்சர், மாத்திரை மற்றும் மருந்து பாட்டிகள் கொட்டப்பட்டுள்ளது. இதனை மேய்ச்சலுக்கு வரும கால்நடைகள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த பகுதிச் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுவதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!