சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது போட்டி நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி
4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு சென்னை அணி கேப்டன் தோனி , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் மகள் ஹன்விகா உடன் கொஞ்சி பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.