Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெங்களூரு புலிகேசி நகர், கோலார் தங்கவயல் உள்பட 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக  ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதன்படி இவர்கள் அணியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனுவும், கோலார்  வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!