Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை கோயிலில் ரஜினி சாமிதரிசனம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் லால்சலாம்.  இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.  ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.  கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் கடந்த 1வாரமாக நடந்து வருகிறது. இதற்காக ரஜினி திருவண்ணாமலையில் தங்கி உள்ளார்.

இன்று காலை 7.20 மணி அளவில் ரஜினி திடீரென திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்தார். அங்கு அவர்  அம்மன் சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.  பின்னர் மூலஸ்தானத்தில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

கோயிலுக்கு ரஜினி வந்ததை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிறிது நேரத்தில் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. 7.30 மணிக்கு  ரஜினி  தரிசனத்தை முடித்துக்கொண்டு  காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!