Skip to content
Home » சாரி, இந்த கேள்வி கேக்காதீங்க… டென்ஷனான ரஜினி….

சாரி, இந்த கேள்வி கேக்காதீங்க… டென்ஷனான ரஜினி….

  • by Senthil

‘லால் சலாம்’ படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் பிசியாகியுள்ளார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛ நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி ” குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வரியில் வாழ்த்துகள் என பதிலளித்து விட்டு சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார்.  ‘லால் சலாம்’ வரவேற்புக் குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கும் நன்றி தெரிவித்தார்.  அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛ அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்” என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!