Skip to content
Home » தளபதி ”67” படத்தில் நடிகர் ஜெயம் ரவி….?..

தளபதி ”67” படத்தில் நடிகர் ஜெயம் ரவி….?..

  • by Senthil

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ளார். ‘தளபதி 67’ என்ற தற்காலிகமாக  அழைக்கப்படும் இப்படத்தை மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

thalapathy 67

பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாகிறது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

thalapathy 67

சமீபத்தில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஜெயம் ரவியை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். ஏற்கனவே நடிகர் விஷாலையும் இப்படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்தார். ஆனால் விஷாலுக்கு வரிசையாக படங்கள் இருப்பதால் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!