Skip to content
Home » வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

  • by Senthil

வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வந்தது. இந்த மக்கள் நேர்காணல் முகாமை தொடர்ந்து நடத்திட அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. எனவே இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு காணலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!