Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி ஏர்போட்டில் தேமுதிக பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு…

  • by Senthil

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி அளவில் புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் தெற்கு வீதியில் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 8 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை புரிந்தார் . விமான நிலையத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கழக

துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி , கழக தேர்தல் பிரிவு செயலாளர் தங்கமணி , மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் , தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் , வடக்கு மாவட்ட செயலாளர் குமார் , துணை செயலாளர்கள் ஜெயராமன் , பிரீத்தா விஜய் ஆனந்த் , காளியப்பன் , ராஜ்குமார் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், வழக்கறிஞர் ஐயப்பன் , லோகராஜ் , அன்வர் அலி ஆபிரகாம் , அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!