Skip to content
Home » திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Senthil

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை ஏற்றார். நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் மற்றும் இணைச் செயலர் R.K.ராஜா வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து தண்ணீர் அமைப்பின் செயலர் பேராசிரியர் கி.சதீஷ் குமார்; நீர்நிலைகளைகக்கப்பது என்பது மண் வளத்தை மனித வளத்தை பூவுலகின் எதிர்காலத்தைக் காப்பதாகும். நீர் நிலைகள் மீதான மண் மீதான பெண்கள்

மீதான வன்முறை நிறுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும் பின்னணியில் உள்ள மறை நீரின் அளவை அதன் இன்றியமையாதத் தன்மையை உணர்ந்துக் கொள்ள வேண்டும். தமிழரின் மரபு நீரை போற்றும் பண்பாட்டு மரபு . நீரை மையமிட்டே தமிழர் மரபு கட்டமைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பூவுலகின் சூழலுக்குப் பாதுகாப்பாகவும் இயற்கையை போற்றி வளர்த்தெடுப்பவர்களும் தொடர்ந்து சூழலைக் காத்திடும் களத்திலும் பெண்களே முதன்மை இடம் வகிக்கின்றனர். மஞ்சப்பை என்பது அவமானமல்ல நம் மண்ணின் அடையாளம்
மஞ்சப் பை எடுப்போம் சூழல் நலம் காப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஆங்கிலத் துறை தலைவரும் எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் ஜெயஸ்ரீ மற்றும் தண்ணீர் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் அனு முனைவர் கீர்த்தனா உள்ளிட்ட மாணவியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!