Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே புதிய ஒன்றிய அலுவலகம்….காணொளியில் முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அந்த வகையில்  புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் திறந்தார். இதையொட்டி அங்கு  நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அப்தாப் ரசூல்,   கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லப்பாண்டியன் , குன்றாண்டார்கோவில் ஒன்றிய குழுத் தலைவர் .பாண்டிச்செல்வி கே.ஆர்.என்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் .த.ஜெயமீரா ரவிக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரமசிவம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!