Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லியோ 2 பாகமாக வெளியாகிறதா? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அனுராக் காஷ்யாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், லியோ படத்திற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ திரைப்படத்தை 2 பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் இரண்டாம் பாகம் 2026ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!