Skip to content
Home » நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

குமரி மாவட்டம், குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால் சிமெண்ட் கலவை எந்திரத்தை கட்டி இழுத்து கொண்டு சென்றது. அப்போது, எதிரே வரும் பஸ்சிற்கு வழி வழிவிடுவதற்காக மினி டெம்போ டிரைவர் வாகனத்தை சாலையோரம் ஒதுக்கியுள்ளார். இதில் குண்டும் குழியுமான சாலையில் வாகனம் இறங்கியதில் மினி டெம்போ வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் கலவை மிஷினின் மேல் பாகம் சாலையில் நடந்து சென்ற லெட்சுமி என்ற பெண்ணின் தலையில் விழுந்தது. அதில் அவர் படுகாயமடைந்து சாலையோரம் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்த அவரை மீட்டு அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!